பாத்ரூமில் பார்க்க கூடாததை பார்த்த இளம் பெண்! அலறியடித்து ஓட்டம்!

ஒரு வீட்டின் பாத்ரூமில் மலைப்பாம்பு இருந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரின் புறநகர் பகுதியான வின்னம் வெஸ்ட் என்ற இடத்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் குளிக்க சென்றுள்ளார். பாத்ரூமுக்குள் சென்ற அவர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்துள்ளார்.

 

வீட்டில் இருந்தவர்கள் பதறிப் போய் அவரிடம் என்ன என்று கேட்டுள்ளனர். சிறிதும் பதற்றம் குறையாமல் அந்த பெண்மணி கத்திக் கொண்டே இருந்துள்ளார்.

 

பின்னர் அந்த பெண்ணை ஆசுவாசப்படுத்தியவர்கள் பாத்ரூமில் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண்மணி நீங்களே சென்று பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சென்ற குடும்பத்தினரும் அலறிக் கொண்டே ஓடி வந்தனர்.

 

ஆம் அவர்கள் வீட்டுக் கழிவறையில் மலைப் பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  உடனடியாக பாம்பை அப்புறப்படுத்த அவர்கள் உதவியை நாடினர்.

 

இதையடுத்து பிரிஸ்பேன் நகரில் உள்ள பாம்பு பிடிப்பவரான ஸ்டீவர் லலோரை அழைத்தனர். அந்தப் பாம்பை பிடிக்க வந்த அவர், அதனை இரண்டு கோணங்களில் படம் பிடித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

 

கழிவு நீர் குழாய் வழியாக எலி உள்ளிட்டவை தான் வரும்  என்ற நிலையில் அழையா விருந்தாளி வந்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

 

இந்தப் படங்கள் ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான கமெண்டுகளையும் அள்ளியுள்ளது.