பஞ்சாப்பை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் அசோக் குமார் என்பவர் ரூ.1.50 கோடி லாட்டரி பரிசு வென்றுள்ளார்.
போலீஸ்காரருக்கு அடித்தது ஒன்றரை கோடி பம்பர்! ஆனால் லாட்டரியை தொலைத்த பரிதாபம்!

அம்மாநில அரசே நேரடியாக லாட்டரி விற்கிறது. இதன்படி, புத்தாண்டுக்கான லோஹ்ரி பம்பர் லாட்டரி சீட்டுக்கு, முதல் பரிசாக, ரூ.3 கோடி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து முதல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
இதில், ஹோசியார்பூர் மாவட்டத்தில் உள்ள மோதியான் கிராமத்தைச் சேர்ந்த குமார் (30 வயது) உள்ளூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார் ஒரே நாளில், வெற்றிப்பெற்ற இருவரில் கோடீஸ்வரராக மாறியுள்ள குமார், .
சினிமா பாணியில் கவுண்டர் மணீ லாட்டரி சீட்டை தொலைத்து விட்டு தேடுவது போல ,பரிசு அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில், லாட்டரி சீட்டை தொலைத்துவிட்டதாக, பதறிப்போன குமார் பிறகு தனது போலீஸ் நிலைய மேஜையில் வைத்திருந்ததை கண்டுபிடித்து, கொண்டு சென்று சமர்ப்பித்துள்ளார்.
இதுபற்றி பஞ்சாப் மாநில லாட்டரி துறை செய்தித் தொடர்பாளர் பேசுகையில், ஜூலை 8ம் தேதி பஞ்சாப் மாநில சவான் பம்பர் லாட்டரி பரிசுகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். முதல் பரிசான ரூ.3 கோடி, 2 பேருக்கு, தலா ரூ.1.50 கோடி என்ற முறையில் பிரித்து தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல, 2வது பரிசாக, 5 பேருக்கு தலா ரூ.10 லட்சமும், 3வது பரிசாக 20 பேருக்கு தலா ரூ.2.50 லட்சமும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.