நிரம்பி வழிந்த பெட்ரோல்! டூ வீலரில் திடீரென பற்றிய தீ! பங்கில் ஏற்பட்ட விபரீதம்! எப்படி தெரியுமா?

பஞ்சாப்பில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருந்த போது எதிர்ப்பாராத விபத்து, துரிதமாக செயல்ப்பட்டதால் தப்பிய பங்க்.


பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியில் பெட்ரோல் நிரப்ப சென்ற இருசக்கர ஓட்டுரர், கவனம் இல்லாமல் அருகில் இருந்தவரிடம் கதைப்பேச, சூடாக இருந்த என்ஞ்சீன் மீது நிரம்பி வழிந்த பெட்ரோலினால் உடனடியாக தீப்பற்றியது.

முதலில் பைக்கில் தீப்பற்றி கண் இமைக்கும் நேரத்திற்க்குள்ளாக அந்த தீ வாகன ஓட்டியின் மீதும், பெட்ரோல் நிரப்பும் பைப் மீதும் சர சரவெனப் பிடிக்க அருகில் இருந்த நபர் உடனடியாக சுதாரித்து முதலில் பைப்பில் இருந்த தீயை அணைக்க முயற்ச்சிக்க உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியதில், அதிர்ஷ்டவசமாக் உயிர் பலியில்லாமல் தப்பித்தனர்.

எனவே இனி பெட்ரோல் நிரப்பும் வாகன ஓட்டிகள், கவனமாக இருக்க அறிவுறுத்தபடுகின்றனர். பெட்ரோல் நிரப்பும் போது அது நிரம்பி வழியும் பட்சத்தில் சூடாக இருக்கும் என்ஜினில் பட்டால் உடனடியாக தீப் பிடித்துவிடும் இதனை உணர்ந்து வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பும் போது கவனத்தை அங்கேயே வைத்திருக்க வேண்டும்.