லேடீஸ் டாய்லெட்டில் ரகசிய கேமரா..! ஆதாரத்துடன் பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

புனே: கழிவறையில் ரகசிய கேமிரா வைத்திருந்ததாக ரெஸ்டாரண்ட் ஒன்றின் மீது நடிகை ரிச்சா புகார் தெரிவித்துள்ளார்.


புனேவில் The Cafe Behive எனும் ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது. இதில் பெண்கள் கழிவறைக்குச் சென்ற  வாடிக்கையாளர் ஒருவர் அங்கு ரகசிய கேமிரா வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன்பேரில், அந்த பெண் தனது நண்பர்களிடம் தகவல் பகிர இதுபற்றி தெரியவந்த நடிகை ரிச்சா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, அதில் புனே மாநகர போலீசாரை டேக் செய்துள்ளார்.

போலீசார், இதனை புகாராக ஏற்று விசாரிக்கின்றனர். பொது இடத்தில் பெண்கள் கழிவறையில் இப்படி கேமிரா வைப்பது மிகவும் அநாகரீகமான செயல் என ரிச்சாவைப் போல பலரும் ட்விட்டரில் கண்டனம் தெரிவிக்கவே, இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.  

  அதேசமயம், தங்களது கடையில் பராமரிப்புப் பணிகளை செய்துவரும் தனியார் ஏஜென்சிதான் இதற்கு பொறுப்பு என்று சம்பந்தப்பட்ட ரெஸ்டாரண்ட் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.