திடீரென பஞ்சரான கார் டயர்! டிரைவருக்கு உதவி செய்த பிரபல டாக்டர்! அந்த நொடி ஏற்பட்ட பயங்கரம்! கலங்க வைக்கும் நிகழ்வு!

புனே: கேப் டிரைவருக்கு உதவச் சென்ற டாக்டர் பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


புனேவைச் சேர்ந்தவர் டாக்டர் குர்ஜேகார். இவர், சக டாக்டர்களுடன் மும்பையில் இருந்து புனேவிற்கு கேப்  ஒன்றில் வந்துள்ளார். அப்போது நெடுஞ்சாலையோரம் திடீரென கேப் டயர் பஞ்சராகியுள்ளது. இதையடுத்து, கார் டயரை மாற்ற, கேப் டிரைவர் முயன்றுள்ளார்.

அவருக்கு டாக்டர் குர்ஜேகார் உதவியுள்ளார். இதன்போது, அவ்வழியே வந்த பஸ் ஒன்று, அவர்கள் 2 பேரையும் இடித்து தள்ளியது. இதில், டாக்டர் குர்ஜேகார், கேப் டிரைவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் இருந்த மற்ற 2 டாக்டர்களும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

டாக்டர் குர்ஜேகார், கோல்டு மெடலிஸ்ட் ஆவார். புனேவில் உள்ள சாஞ்செட்டி ஹாஸ்பிடலில் முதுகெலும்பு அறுவை சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவராக அவர் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.