சரும பளபளப்புக்குத் தேவையான எல்லாமே பரங்கிக்காயில் இருக்கிறதா ?!!

வடஅமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட பரங்கிக்காயை பண்டிகை காலங்களில் அதிகம் பயன்படுத்துகிறோம். கேரளாவைச் சேர்ந்தவர்கள் பரங்கிக்காய் எனப்படும் மஞ்சள் பூசணியை உணவுக்காக அதிகம் பயன்படுத்துகிறார்கள்.


மஞ்சள், ரோஸ் நிறங்களில் எளிதில் விளையக்கூடிய பரங்கிக்காய் சமையலுக்கும், அதன் விதை மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. இனிப்பான சுவை கொண்டது என்பதால் இதனை சர்க்கரை பூசணி என்றும் சொல்வார்கள்.

• வைட்டமின் ஏ சத்து அளவுக்கு அதிகமாக பரங்கிக்காயில் இருப்பதால், இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயலாற்றுகிறது பரங்கிக்காய்.

• குளிர்ச்சி தன்மை நிரம்பியிருப்பதால் உடம்பு சூடு நீங்குவதுடன் பித்தம் நீங்கும். உடல் எரிச்சல் தீரும்.

• பரங்கிக்காயில் கெராட்டினாயிட்ஸ் அதிகம் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு துணை நிற்கிறது.

• சருமத்திற்குத் தேவையான கொழுப்பு அமிலமும், சரும பளபளப்புக்குத் தேவையான வைட்டமின் ஈ, துத்தநாகம், மக்னீசியமும் பரங்கிக்காயில் நிரம்பியுள்ளன.

பரங்கிக்காயிலும் விதையிலும் பல்வேறு மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளதால் ஜீரணம், ரத்த சுத்திகரிப்பு, சுவாசம் போன்றவை சரவர நடைபெற செயலாற்றுகிறது.