நோஞ்சானை புஷ்டியாக்கும் புளிச்ச கீரை

புளிப்பு சுவை கொண்ட புளிச்ச கீரையின் இலை, காம்பு, பூ, தண்டு என அத்தனையுமே மருத்துவக்குணம் நிரம்பியது ஆகும். ஆந்திராவில் கோங்குரா என்று அழைக்கப்படும் இந்த கீரையை விரும்பி சாப்பிடுகிறார்கள்.


·         வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த புளிச்சகீரை உடலை வலிமையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

·         நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு இந்தக் கீரையை தினமும் உணவோடு சேர்த்து கொடுத்து வர அவர்களின் உடல் புஷ்டியாகும்.

·         நாட்பட்ட தோல் பிரச்னை உள்ளவர்கள் இந்தக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது