சிங்கப்பூரில் மாதம் 1 லட்சம் வேலையை உதறித்தள்ளிய இளைஞர்! புதுக்கோட்டையில் சுண்டல் விற்கும் பரிதாபம்! நெகிழ வைக்கும் காரணம்!

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 3வது தலைமுறையாக தேங்காய், மாங்காய்ப் பட்டாணி சுண்டல் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறது சுதர்சன் என்பவரின் குடும்பம். 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கடையின் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர்.


4 மணி நேரம் வரை சுதர்சன் குடும்பம் வியாபாரம் செய்யும் பட்டாணி சுண்டல்தான் பேருந்து நிலைய பயணிகள் பலருக்கும் மதியச் சாப்பாடு. பாரம்பரியம் மாறாதா சுவையுடன் 50 வருஷமாக பட்டாணி விற்பனை செய்து வருகின்றனர். 

முதலில் ராஜகோபால் என்பவர் ஆரம்பித்த பட்டாணி வியாபாரம் அவர் மறைந்த பிறகு அவரது மகனும் தற்போது சுதர்சனன் குடும்பம் நடத்தி வருகிறது. சிறிது காலம் சிங்கப்பூரில் மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு வேலை கிடைத்து அங்கே சென்று பணிபுரிந்த சுதர்சனன் திடீரென தந்தை இறந்து விடவே மீண்டும் தாய்நாட்டிற்கே வந்து விட்டார்.

தந்தை இறப்பால் சிறிது காலம் சுண்டல் வியாபாரம் நின்று போனது. மீண்டும் சிங்கப்பூர் சென்றால் பட்டாணி சுண்டல் வியாபாரம் தந்தையுடன் நின்று போய்விடும் என கருதிய சுதர்சன் சிங்கப்பூர் வேலை வேண்டாம் என்று முடிவு செய்து குடும்பத்துடன் பட்டாணி தொழிலை குடும்பத்த்துடன் நடத்த தொடங்கினார்.

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு வேலையை பிரித்துக் கொள்கிறார்கள். இப்படி, குடும்பத்தோட சேர்ந்து வேலையைப் பிரிச்சுக்குவோம். வியாபார மொதல்ல பைசாவில்தான் விற்றுக் கொண்டிருந்த சுண்டல் விலையை விலைவாசி உயர்வு காரணமாக 15 ரூபாய்க்கு விற்கின்றனர். கஷ்டத்தோடு வருபவர்களுக்கு சில சமயங்களில் இலவசமாக சுண்டல் தருகிறார்கள்.