தனி மனுசியாக 1 ஏக்கர் நிலத்தில் நெல் விதைத்த மாணவி! மிரள வைத்த ராஜலட்சுமி!

புதுக்கோட்டை அருகில் விவசாய கூலி வேலைக்கு ஆள் தட்டுபாடால் தானே களத்தில் இறங்கி 3 நாளில் சோலோவாக பயிரிட்டு மாணவி தெறிக்கவிட்டுள்ளார்


புதுக்கோட்டை மாவட்டம்,  அக்கரை வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் ராஜலெட்சுமி (வயது 19) தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தாடு அரசு பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

பெற்றோர் இருவரும் விவசாயம் சார்ந்து இருப்பவர்கள் என்பதால் சிறுவயதில் இருந்தே விவசாயம் குறித்து ஆர்வம் கொண்டவர்.இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கருப்பையா ஆழ்துளை நீர்ப்பாசனம் மூலமாக நெல் பயிரிட முனைந்தார், ஆனால் தக்க சமயத்தில் வயல் வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால், அவதியுற்றார்.

இதனை அடுத்து களமிறங்கிய மாணவி ராஜலஷ்மி, தனி ஆளாக தொடர்ந்து 3 நாட்களாக, சுமார் 1 ஏக்கர் நிலத்தை பயிரிட்டு அசத்தியுள்ளார்

மாணவியின் இந்த சிறு வயதில், விவசாயம் சேர்ந்த ஆர்வமும், அன்பும் அவரை சமூகம் சார்ந்து வளர்த்தெடுக்க உதவும் . ராஜலஷ்மியின் இந்த துணிகரத்தை பலரும் பாராட்டி உற்சாகம் அளித்து வருகின்றனர்.