திடீரென இழுத்து மூடப்பட்ட தனியார் பள்ளி! நடுத்தெருவுக்கு வந்த 350 மாணவிகள்! அதிர்ச்சி காரணம்!

புதுச்சேரியில் முன்னறிவிப்பு இன்றி தனியார் பள்ளி ஒன்று மூடப்பட்டதால், அதில் படிக்கும் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


காலாப்பட்டு பகுதியில் அமலா தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வந்தது. இங்கு, 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியின் 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் ஜாமென்ட்ரி பாக்ஸ் கொண்டு வராததை, சமீபத்தில் ஆசிரியை ஒருவர் கண்டித்துள்ளார்.

இதற்கு, பழி வாங்கும் வகையில் அந்த மாணவனின் பெற்றோர் பள்ளி முதல்வர் ஆனந்தனை கடுமையாக அடித்துள்ளனர். இதையடுத்து போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி பள்ளி நிர்வாகம் நிரந்தரமாக பள்ளிக்கூடத்தை மூட முடிவு செய்தது.  

இதையடுத்து, திடீரென நேற்று நுழைவாயிலை மூடி, வெளியே ஒரு பிளாக் போர்டில், பள்ளி நிரந்தரமாக மூடப்படுகிறது என்றும், கூடுதல் விவரங்களுக்கு பள்ளி கல்வித்துறையை அணுகவும் என்றும் எழுதி வைத்திருந்தனர். இதைப் பார்த்து, மாணவ, மாணவிகளும், அவர்களின் பெற்றோரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.