பிளஸ் குழந்தை! மைனஸ் குழந்தை! புதுச்சேரி வீடுகளில் மர்ம குறியீடுகள்! குறி வைக்கிறார்களா வட மாநில கொள்ளையர்கள்?

புதுச்சேரியில் வீட்டு சுவர்களில் அடையாளக் குறியீடுகள் வரைந்து கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் .


புதுச்சேரியில் அண்மைக் காலங்களில் வடமாநிலக் கொள்ளையர்களின் திருட்டு வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் சாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் வீதி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வீட்டுச் சுவர்களில் பிளஸ் மற்றும் மைனஸ் குறியீடுகளோடு குழந்தைகள் வரைவது போன்ற பொம்மை வரைபடங்கள் வரையப்பட்டுள்ளன தொடக்கத்தில் இதனை இதனை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் தற்போது இவை கொள்ளைக் கும்பல்களுக்கான ரகசிய குறியீடு என்று கூறப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பகல் நேரங்களில் வியாபாரிகள் போல வரும் கொள்ளையர்கள் வீட்டுச் சுவர்களில் இதுபோன்ற அடையாள குறியீடுகளை வரைந்து வைத்து விட்டு செல்வதாகக் கூறப்படுகிறது.

அதனடிப்படையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் முதியவர்கள் ஆகியோர் பற்றிய விவரங்களை இந்த குறியீடுகள் மூலம் அவர்களது கூட்டாளிகள் புரிந்துகொண்டு இரவு நேரத்தில் வந்து கொள்ளையடித்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பான புகார்களின் பேரில் அந்த இடங்களுக்கு வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் போலீசார் எச்சரித்துள்ளனர்