அவன் மனைவிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்! பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் எடுத்த பகீர் முடிவு! புதுச்சேரி அதிர்ச்சி!

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் விபரீத முடிவு எடுத்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.


புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த 31 வயதான இளம்பெண், போட்டோ ஸ்டூடியோ ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்த ஸ்டுடியோவின் உரிமையாளர், இளம்பெண்ணிற்கு அவ்வப்போது பிரியாணி, தேநீர் போன்றவற்றை வாங்கி கொடுப்பது வழக்கமாகும். இதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா, பொறுமையாகப் படியுங்கள்.

அடிக்கடி பிரியாணி, தேநீர் வாங்கித் தரும் ஸ்டுடியோ உரிமையாளர், அதில் மயக்க மருந்து கலந்துவிடுவாராம். இதனால், அப்பெண், மயங்கி விழுவதும், அவரை கடை உரிமையாளர் நினைத்தபடி பலாத்காரம் செய்வதும் தொடர்கதையாக இருந்துள்ளது. இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தையிடம் கூற, அவர் ஸ்டுடியோ உரிமையாளரிடம் முறையிட்டிருக்கிறார்.

தவறை ஒப்புக் கொண்ட ஸ்டுடியோ உரிமையாளர், அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், ஸ்டுடியோ உரிமையாளருக்கு ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகள் இருப்பதாக, பெண் வீட்டாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.  

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம்பெண், மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, உடலில் தீ வைத்து, தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்தார். இதன்படியே தற்கொலை செய்ய முயன்ற அவர் பெருமளவு தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாகும் முன்பாக, அவர் தனது சாவுக்குக் காரணம் அந்த ஸ்டுடியோ உரிமையாளர் என்று கூறவே, அதையேற்று வழக்கு பதிந்த போலீசார், ஸ்டுடியோ உரிமையாளரான மதுர என்பவரை கைது செய்தனர்.