காஞ்சிப்பட்டு..! கன்னத்தில் வெட்கம்..! தமிழச்சியாக மாறி தமிழனை கரம்பிடித்த அமெரிக்க இளம் பெண்!

அமெரிக்காவில் இன்ஜினியராக பணியாற்றி வரும் புதுவை இளைஞர் அங்குள்ள வெள்ளைக்காரப் பெண்ணை காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுவையில் ரேடியர் மில் மேலாளராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகர். இவரது மகன் தீபக் முரளி. இவர் தனது இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் ராப்லஸ் என்ற நிறுவனத்தின் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் வேறு ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றிவந்த வெள்ளைக்கார பெண்ணான தாரா பையர்ஸ் என்பவருடன் தீபக் முரளிக்கு காதல் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இது குறித்து இருவரும் கலந்தாலோசித்த பொழுது தீபக் இந்து முறைப்படி சொந்த நாட்டில் திருமணம் செய்ய ஆசைப்பட்டு உள்ளார். தீபக் முரளியின் ஆசைக்கு இணங்கி தாராவும் இதற்கு ஒப்புக்கொண்டார்.

அதன்படி இன்று காலை தீபக் முரளிக்கும் தாராவிற்கும் புதுவை ஆனந்தா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழா முழுக்க முழுக்க இந்து முறைப்படி நடைபெற்றது. இதில் வெள்ளைக்கார பெண்ணாக தாரா பட்டுப் புடவையுடன் தமிழ் கலாச்சார பெண்ணாக காட்சியளித்தார்.

அதேபோல் மாப்பிள்ளையான தீபக் முரளியும் பட்டு வேஷ்டி சட்டையில் ஜொலித்தார். இவர்களது திருமணத்திற்கு தாராவின் அமெரிக்காவிலிருந்து வந்த தாராவின் உறவினர்கள் 25 பேர் மற்றும் தீபக் முரளியின் உறவினர்கள் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.