ஒன்றரை வயது குழந்தை முன்பு தூக்கில் தொங்கிய இளம் பெண்! 2வது திருமணத்தால் நேர்ந்த விபரீதம்! அதிர வைக்கும் காரணம்!

புதுச்சேரி: 2வது திருமணம் செய்துகொண்ட இளம்பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


புதுச்சேரியில் உள்ள கோரிமேடு கவிக்குயில் நகர் 2வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி.  இவரது முதல்மனைவி ஏற்கனவே இறந்துவிட்டதால், கடந்த 2017ம் ஆண்டு சுமதி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்டார். டெம்போ டிரைவராக உள்ள கிருஷ்ணமூர்த்திற்கு ஏற்கனவே முதல் மனைவி வழியாக ஒரு ஆண் குழந்தையும், 2வது மனைவி சுமதி வழியாக ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், திடீரென அவரது 2வது மனைவி வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப் போட்டு இறந்து கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததோடு, இதுபற்றி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.  

இதற்கிடையே, சுமதியின் தந்தை போலீசாரை சந்தித்து, தனது மகள் சாவுக்கு அவரது கணவர் கிருஷ்ணமூர்த்திதான் காரணம் என, புகார் செய்துள்ளார். இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.