கைக்குழந்தைகளுடன் வந்து தகாத செயல்! நான்கு பெண்களை பின்னி பெடலெடுத்த கோவை மக்கள்!

கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகமாக திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது சகஜமான ஒன்றாகிவிட்டது.


இந்நிலையில் இன்று கோவை மாவட்டம் மத்திய பகுதியான டவுன்ஹாலிருந்து பேரூர் செல்லும் தனியார் பேருந்து ஒன்று நான்கு பெண்கள் கைக்குழந்தையுடன் ஏறி உள்ளனர். அவர்கள் பார்ப்பதற்கு பணக்கார பெண்கள் போலவே ஆடை அணிந்து வந்துள்ளனர். பேருந்தில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில் அவர்களுடன் வந்த ஒரு பெண் கைக்குழந்தையுடன் இருந்ததால் இருக்கையில் இருந்த ஒரு பெண்மணி எழுந்து அவரை உட்காரும்படி இடம் கொடுத்துள்ளார். பேருந்து சிறிது தூரம் செல்லவே இருக்கையில் இருந்த ஒவ்வொருவராக இருங்க தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து இரண்டு பேர்  இருக்கையில் அமர்ந்தபடி பேருந்தில் பயணம் செய்துள்ளனர். பின்னர் இருக்கையில் அமர்ந்த இருவர் அருகிலுள்ள பெண்மணியின் கழுத்தில் உள்ள நகையை திட்டமிட்டு திருட முயன்றுள்ளனர்.இதைப் பார்த்த அருகில் உள்ள சக பயணிகள் அவரை கையும் களவுமாக பிடித்து பேருந்தின் உள்ளேயே வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பேருந்து வேகம் குறையவே அவர்கள் நான்கு பேரும் கீழே இறங்கி தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதைப் பார்த்த சக பயணிகள் அவர்களை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அங்கு வந்த காவல்துறையினர் அவர்கள் நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பேருந்தில் வரும் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.