தனியாக சிக்கிய போலீஸ்காரர்..! லத்தியை பறித்து வெளுத்தெடுத்த போராட்டக்காரர்கள்! அதிர வைக்கும் சிசிடிவி காட்சி உள்ளே!

இந்திய தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தில் போலீசார் ஒருவரை மாணவர்கள் தாக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


டெல்லியில் கடந்த சில தினங்களாகவே குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர் தற்போது ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகனங்களுக்கு தீ வைப்பதும் அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்துவதுமான செயல்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் குடியிருப்பு பகுதியான சீலாம்பூரில் போராட்டம் வெடித்த நிலையில் , அங்குள்ள கடைகள் மற்றும் பொது சொத்துகளை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் போலீசார் மீது கற்களை வீசியும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அங்கு அதிக அளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

போராட்டக்காரர்களை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டுவர தடியடி நடத்தியுள்ளனர். இந்நிலையில் போலீஸாரின் தடியடிக்கு பயந்து போராட்டக்காரர்கள் அங்குமிங்குமாக ஓட தொடங்கினர். அப்போது போராட்டக்காரர்களிடம் தனியாக சிக்கிய காவலர் ஒருவரை அவரது கத்தியை பிடுங்கி இளைஞர்கள் அவரை அடிக்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் அந்த வீடியோவில் காவலருக்கு பின்னால் ஒருவர் ஓடிவந்து அவரை கீழே தள்ளி விடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பலராலும் பரப்பப்பட்டு வருகிறது.