கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் விபச்சாரம்..? நல்லகண்ணு பெயருக்கும் அவதூறு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தை விபச்சார விடுதி என விஸ்வா.எஸ் என்ற முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா குரல் கொடுத்துள்ளார்.


95ஆண்டுகளாக நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அடித்தட்டு மக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த நீண்ட நெடிய, பயணத்தில் அந்தக் கட்சியின் செயல்பாடுகள், தமிழ்நாட்டுக்குப் பல நன்மைகளைப் பெற்றுத்தந்துள்ளன. இந்திய விடுதலை போராட்டம் முதல் அடித்தட்டு தொழிலாளர்களைப் பாதிக்கும் ஊதிய உயர்வு பிரச்சினைகள் வரை அனைத்து போராட்டங்களிலும் முன்னிலையில் போராடுவதில் இந்திய கம்யூனிஸ்ட் தோழர்களும் முக்கியமானவர்கள்.

எஸ்.ஏ.டாங்கே, ராஜேஸ்வர ராவ், ஜீவானந்தம், ஐயா ஆர். நல்லகண்ணு என பல எளிமையான தலைவர்களை உருவாக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தை விபச்சார விடுதி என்றும் பெண் உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் அவரது மகனுடன் உள்ள புகைப்படத்தைப் பதிவு அவரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் திட்டமிட்டுப் பதிவு செய்துள்ளார் விஸ்வா.

எளிமையின் சின்னமாக நம்மிடையே வாழ்ந்து வரும் விடுதலை போராட்ட வீரர் தோழர் இரா. நல்லகண்ணு அவர்களை இழிவுபடுத்தும் வகையில், சமூக அமைதி சீர்குலைத்து மோதலை உருவாக்கும் தீய உள்நோக்கத்துடன் முகநூலில் ஆபாசப்படம் போட்டுச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த வெறுப்புணர்வை து£ண்டும் பதிவு குறித்துக் கடந்த 17.7.2020 அன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இதுவரை 

காவல்துறையின் இதுபோன்ற அலட்சியப் போக்கைக் கண்டித்தும், ஜனநாயக இயக்கங்களையும், அதன் தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் நபர்களைக் கண்டித்தும் வரும் 22.7.2020 அன்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் முக கவசத்துடன், சமூக இடைவெளியைப் பின்பற்றி மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும் எனத் தெரிவித்துள்ளார்.