முதலில் பேராசிரியருக்கு பிறகு மாணவனுக்கு! செல்போன் முன் ஆடைகளை களைந்த பேராசிரியை! பிறகு நேர்ந்த விபரீதம்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் அதே கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியையை வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் ஆபாசமாக புகைப்படம் எடுத்து அதை சமூக வலை தளங்களில் பதிவேற்றியுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு பேராசிரியராக பணிபுரியும் ஒருவர் அதே கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் பல நாட்களாக பழகிய நிலையில் இருவரும் தங்களின் வாட்ஸ் அப் செயலி மூலம் வீட்டிலிருந்தபடியே வீடியோ கால் பேசி வந்துள்ளனர்.

இதையடுத்து ஒரு கட்டத்தில் பேராசிரியர் அப்பெண்ணை ஆடைகளை கழட்டும்படி கேட்டுள்ளார். இதையடுத்து அப்பெண்ணும் தனது ஆடைகளை கழட்டி பிறகு வீடியோ கால் மூலம் தனது ஆண் நண்பருடன் பேசியுள்ளார். இதையடுத்து இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர் அவை அனைத்தையும் தனது செல்போனில் ஸ்கிரீன் ஷாட் மூலம் பதிவு செய்துள்ளார்.

பின்னர் இந்த காட்சிகளை தனது ஆண் நண்பரிடம் காண்பித்துள்ளார். இதையடுத்து அவரும் பேராசிரியையின் போன் நம்பரை பெற்று பேசி வந்துள்ளார். இந்நிலையில் பேராசிரியரின் நண்பனும் அப்பெண்ணிடம் நன்றாக பேசி பழகி அவரும் ஆடை இல்லாத நிலையில் புகைப்படங்களை பதிவு செய்துகொண்டு பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதையடுத்து அப்பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் மற்றும் அவரது நண்பர் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழ்நாடு காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் இந்த மாதிரி சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சமீபத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் சார்பில் ஒரு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் பெண்கள் ஆண் நண்பர்களுக்கு ஆபாசமான புகைப்படங்கள் அனுப்புவது மற்றும் வீடியோ கால் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் வங்கிக் கணக்கு எண் மற்றும் பின் நம்பர் போன்றவற்றை மற்றவர்களிடம் தெரிவிக்கக் கூடாது மற்றும் தெரிவித்தால் எந்த மாதிரியாக பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதைப்பார்த்தும் கூட திருந்தாமல் இந்த மாதிரியாக ஈடுபடுவது பெரும் குற்ற செயலாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.