மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற புகாரில் சிக்கியுள்ள நிர்மலா தேவி அடிக்கடி நீதிமன்றம் வருவதை பார்த்த ஒரு இளைஞர் அவருக்கு ரசிகனாகவே மாறிவிட்டார்.
நிர்மலா தேவிக்கும் ஒரு ரசிகன் கிடைசாச்சு! அருப்புக்கோட்டை ருசிகரம்

விருதுநகர் மாவட்டம் தேவாங்கர் கலைக் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி தன்னுடைய கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகாரில் சிக்கியவர். ஒரு சில பெரிய மனிதர்கள் ஆசைக்கு இணங்கினால் சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என தொலைபேசியில் நிர்மலா தேவி பேசிய ஆடியோ தமிழகத்தில் பரபரப்பாகி இந்த பிரச்சனை ஆளுனர் மாளிகை தொடர்பு படுத்தி பேசப்பட்டது.
இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி பேராசிரியர் முருகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது நீதிமன்ற கண்டிப்புகளுடன் ஜாமினில் வெளிவந்த நிர்மலா தேவி விசாரணைக்காக அடிக்கடி திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.
நிர்மலா தேவி நீதிமன்றம் வந்தால் தலைப்புச் செய்தியில் போடாத ஊடகங்களே இல்லை என்ற நிலை ஆகிவிட்டது. இந்நிலையில் நிர்மலா தேவியின் செய்திகளை தெரிந்து கொண்ட இளைஞர் ஒருவர் நிர்மலா தேவி மீது எந்த தவறும் இல்லை என்றும் அவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நிர்மலா தேவிக்கு தனக்கு சகோதரி என்று கூறிய அந்த இளைஞர் அன்பழகன் ஒவ்வொரு முறை அவர் நீதிமன்றம் வரும்போது அவரை தூரத்தில் இருந்து பார்த்து விட்டு செல்வதாக தெரிவித்தார். அதேபோல் வழக்கம்போல் இன்று நிர்மலா தேவி நீதிமன்றத்திற்கு வருவார் என எதிர்பார்த்த அன்பழகனுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.
தன்னுடைய உடல் நிலை சரியில்லாததால் நீதிமன்றத்திற்கு வர இயலாது என நிர்மலாதேவி விருப்ப மனு அளித்துள்ளது அன்பழகனுக்கு தற்போதுதான் தெரிந்துள்ளது. நிர்மலா தேவியை பார்க்காமல் ஏங்கிப் போய் உள்ளதாக கூறிய அன்பழகன் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.
ஏற்கனவே நிர்மலா தேவி நீதிமன்றம் வந்தபோது தியானம் செய்து குறிகள் சொல்லி தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார். இந்த இளைஞரும் நிர்மலா தேவி பெயரை பயன்படுத்தி தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள நினைப்பதாக சமூக வலைதளங்களில் பலர் நக்கல் அடிக்கின்றனர்