விஷாலுக்கு எடப்பாடியார் வைத்த செம ஆப்பு! தயாரிப்பாளர் சங்கம் இனி தமிழக அரசு கன்ட்ரோலில்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


விஷால் தலைமையிலான  தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கதில் வைப்பு நிதிகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பதிவு துறையில் புகார் அளித்து இருந்தனர்.

இதற்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர்  சங்கத்தின் அறிக்கை ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்பதால் பதிவாளர் தமிழக அரசிடம் பரிந்துரை கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து தமிழக அரசு பதிவு துறை அதிகாரியான சேகர் என்பவரை தயாரிப்பாளர் சங்கத்தின் சொத்துக்களை நிர்வாகிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக நியமித்து அரசனை வெளியிட்டது தமிழக அரசு.

இதன் மூலம் இனி விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் சுயமாக செயல்பட முடியாது. அனைத்து செயல்பாடுகளையும் தமிழக அரசு கண்காணிக்கும். இதனால் விஷாலுக்கு எடப்பாடி அரசு வைத்துள்ள ஆப்பாக இது கருதப்படுகிறது.