செவிலியர் பிரிசில்லா மரணத்தில் மெகா சர்ச்சை..! கொந்தளிக்கும் செவிலியர்கள் சங்கம்.

சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலிய கண்காணிப்பாளர் நிலை- 1 ஆக பணிபுரிந்துவந்த பிரிசில்லா உடல்நலக்குறைவால் நேற்று இரவு மருத்துவமனையில் இறந்துவிட்டார். அவரது மறைவிற்காக தமிழக அரசு செவிலியர்கள் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


மேலும், சில தினங்களுக்கு முன் இவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் சில உடல் உபாதைகளுடன் சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்றபோது அவருடைய அறிகுறிகளை மட்டுமே கருத்தில்கொண்டு ,கொரோனா டெஸ்ட் எடுக்கும் முன்னரே அவரை கொரோனா சிகச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்பிறகு கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த இரண்டு கொரானா டெஸ்ட்களுமே நெகடிவ் என வந்துள்ளது. அதன்பின் இவருக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது. அந்தநேரம் கூட இவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றவில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

நேற்று (27.05.2020) மாலை அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகவே அவருக்கு வென்டிலேட்டர் சப்போர்ட் கொரோனா வார்டிலேயே செய்துள்ளனர். அதன்பின் சுமாராக இரவு 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் ஒரு சோகமான விசயம் என்னவெனில் இவருக்கு எடுத்த இரண்டு டெஸ்ட் ரிசல்ட் கொரோனா நெகடிவ் என வந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆனால் இவருடைய கேஸ் ஷீட்டில் இவருக்கு கொரோனா பாசிடிவ் என குறிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாடு ஏற்க முடியாததாக இருக்கிறது. இதே கூற்றை இவரது உறவினர்களும் முன் வைக்கின்றனர். இதனை அறிந்த பல்வேறு டிவி மீடியாக்களும் இதையே தெரிவிக்கிறது.

இதையறிந்து தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில செயலாளர் என்ற முறையில் இன்று மாண்புமிகு. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சுகாதார செயலாளர் போன்றோரிடம் துக்கம் தாங்காமல் கதறினேன். எங்களுடைய கோரிக்கைகள் இவைதான். 

* அவருக்கு டெஸ்ட் செய்யும் முன்னரே ஏன் கொரோனா வார்டில் அட்மிட் செய்தார்கள்? 

* அவருக்கு கோரோனா பாசிடிவாஅல்லது நெகடிவா என ஏன் உறுதி செய்யவில்லை.?

* அவருக்கு இரண்டு டெஸ்ட் எடுத்தபோது நெகடிவ் என ரிசல்ட் வந்துள்ளபோதும் அவரை ஏன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றவில்லை.?

* அவருக்கு நெகடிவ் என ரிசல்ட் வந்துள்ளபோது மீடியா ரிப்போர்ட் படி அவருடைய கேஸ் ஷீட்டில் எப்படி கொரோனா பாசிடிவ் என எழுதப்பட்டிருந்தது.?

* நாங்கள் பல்வேறு முறை மருத்துவமனை முதல்வரிடம் பேசிய போதும் எங்களுக்கு சரியான விளக்கமளிக்க மறுத்து ஏன்?

சென்னையில் உள்ள ஒரு செவிலிய கண்காணிப்பாளருக்கே சிகிச்சையில் இவ்வளவு அலட்சியமெனில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பணிசெய்யும் செவிலியர்களின் நிலை என்ன? இனிமேல் எப்படி செவிலியர்கள் தைரியமாக கொரோனா வார்டில் பணியாற்றுவார்கள். சிகிச்சை முறைகளில் அலட்சியமாக இருந்த மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி மீது துறை ரீதியான விசாரணை செய்து தவறிழழைத்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டி தமிழக அரசை வலியுறுத்துகிறோம். 

கொரோனா பாசிடிவ் எனில் இறந்த எங்கள் செவிலிய கண்காணிப்பாளருக்கு 

அவருக்கு கிடைக்கவேண்டிய அனைத்து பணப்பயன்களையும் தாமதிக்காமல் வழங்கி, இதற்கு இழப்பீடாக அவர் வாரிசு ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என இதுகனம் தமிழக அரசை மன்றாடி கேட்டுக்கொள்கிறோம் என மாநில பொதுச்செயலாளர், தலைவர் உள்ளிட்ட பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.