கட்டிய மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டும்ய கணவன்! மதுரையில் பகீர் சம்பவம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் காதலால் பொள்ளாச்சி மகிழம்பட்டியை சேர்ந்த மகாலட்சுமி மற்றும் மதுரை கொட்டாம்பட்டியை சேர்ந்த அஜீத்குமார் இருவருக்கும் திருமணம் நடந்தது. இப்போது அஜித்குமார் தன்னிடமிருந்து பிரிந்து சென்று தன்னை ஏமாற்றுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் மகாலட்சுமி.


முதலில் முகநூலில் நண்பர்களாக பழகிய இவர்கள் நாளடைவில் நட்பு காதலாக மாறியது இதனைத் தொடர்ந்து இருவரும் இதனை வீட்டில் தெரிவித்து பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

சில நாட்கள் சென்ற பிறகு  கணவரின் வீட்டில் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை செய்ததாகவும், கணவரும் ஆபாச புகைப்படங்களை காட்டி தன்னிடம் பணம் கேட்டு வந்துள்ளதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான மகாலட்சுமி தனது கணவர் குடும்பத்தினர் மீது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த அவர், திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.