இரவு உண்ணாமல் தூங்குவதால் வரும் பாதிப்புகள்!

சிலர் உண்ணாமலேயே படுத்துவிடுவார்கள். குறைவாக உணவு உண்பதாலும், உண்ணாமலே உறங்குவதாலும் பல பிரச்சனைகள் ஏற்படும்.


இரவு உணவு இல்லை எனில் இன்சுலின் சுரப்பதில் பிரச்சனை ஏற்படும். இது உடலுக்குத் தேவையான மிக முக்கிய ஹார்மோன். அதேபோல் கொலஸ்ட்ரால் மற்றும் தைராய்டு அளவு பாதிக்கப்படும். இரவில் சரியான உணவு சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளவில்லை எனில் பல நோய்கள், உடல் தொந்தரவுகளைச் சந்திக்கக் கூடும்.

எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் உறங்கச் சென்றால் ஆழ்ந்த உறக்கம் வராது. பசியால் வயிறு கிள்ளும். நாம் தூங்க நினைத்தாலும் வெறும் வயிறு மூளையை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து, ஹார்மோன்கள் இல்லையெனில் அது ஓய்வு நிலைக்குச் செல்லாது.

பலரும் இரவில் அதிகமாக உண்பதால் எடை அதிகரிக்கும் என்று நினைப்பார்கள். இதற்காகப் பலரும் உண்ணாமலேயே தூங்கிவிடுவார்கள்.ஆனால் அது முற்றிலும் தவறு. வெறும் வயிற்றில் தூங்கினால், உடல் தனக்குத் தேவையான ஆற்றலைப் பெற ஏற்கனவே தங்கியிருக்கும் கெட்டக் கொழுப்பைப் பயன்படுத்தும். அவை தேவையற்றக் கொழுப்புகள் என்பதால் அவற்றைப் பயன்படுத்தும்போது உடல் எடை அதிகரிக்கும்.