கட்சி விழாவுக்கு பந்தல் போட்டவர் முக்கிய கட்சியின் வேட்பாளரனார்!

கட்சி விழாவிற்கு பந்தல் போட்டவர் பெரியகுளம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் ஒரு முறை ஓ.பி.எஸ் காலில் விழுந்து எழுந்தார்.


தேனி தொகுதிக்கான அ.தி.மு.க.தேர்தல் பணிமனை விழா. தேனி ஏ.பி.எம் ஹோட்டல் அருகில் நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது பந்தலின் ஓரமாக நின்றுகொண்டிருந்த மயில் வேல் என்பவருக்கு திடீர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. கட்சி விழாக்களுக்கு பந்தல் போடும் தொழில் செய்து வருபவர் அவர். நடந்துகொண்டிருந்த விழாவுக்கும் அவர்தான் பந்தல் போட்டிருந்தார். 

விழாவின் இடையே பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக  மயில்வேல் பெயர் அறிவிக்கப்பட்ட போது தன் காதுகளை அவரால் நம்ப முடியாமல் இருந்திருக்கக் கூடும். கட்சியின் அடிப்படைத் தொண்டனான தனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பெரியகுளம் தொகுதி வேட்பாளராக  அறிவிக்கப்பட இருந்த டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு முருகனுக்கு எதிராக நிர்வாகிகளிடையே அதிருப்தி நிலவியதாகக் கூறப்படும் நிலையில் மயில்வேலுக்கு அடித்தது லக். முருகனுக்கு கிடைக்காத வாய்ப்பு மயிலுக்கும், வேலுக்கும் கிடைத்துள்ளது.