ஆசிரியர் அடித்த அடியில் மூச்சுவிட முடியாமல் மயங்கிய மாணவன்..! பாகிஸ்தானிலும் இப்படித்தானா?

பாகிஸ்தானில் தனியார் பள்ளி ஒன்றில் பாடங்களை சரிவர படித்து வராததால் ஆசிரியர் அடித்ததில் பள்ளி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தான் லாகூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் பிலால் (15),வகுப்பில் ஆசிரியர் கொடுத்த வீட்டு பாடம் மற்றும் படித்து வர சொன்ன பாடங்களை சரியாக படித்து வராததால் பிலாலை வகுப்பாசிரியர் தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில் ஆசிரியர் வயிற்றுப் பகுதியில் தாக்கியபோது மாணவன் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டுள்ளான். இந்நிலையில் அதை கண்டுகொள்ளாத ஆசிரியர் மாணவனை விடாமல் அடித்துள்ளார். மற்றும் மாணவனின் தலையை பள்ளி சுவற்றின் மீது மோதியுள்ளார். இந்நிலையில் அதே இடத்தில் மயங்கி சரிந்து விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இறந்த மாணவனின் பெற்றோர்கள் அந்த ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பள்ளி ஆசிரியரை கைது செய்த நிலையில் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.