உங்களுக்கு கொரோனா இருக்கிறது என சந்தேகமா? நீங்கள் பரிசோதனை செய்ய செல்ல வேண்டிய இடம் இது தான்..!

நாளுக்கு நாள் கொரனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் அந்த நோய் இருக்கிறதா என கண்டறிய 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.


உலகெங்கும் கொரனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் அந்த பாதிப்பை தாங்க முடியாத முதியர்வகள் நீரிழிவு நோயாளிகள், எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் நாள்தோறும் மரணம் அடையும் செய்தி உலக மக்களையே பீதியில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் ஒருவருக்கு கொரனா பாதிப்பு இருக்கிறதாக என கண்டறிய போதுமான ஆய்வகங்கள் அரசு தரப்பில் இல்லை.

ஆயிரக்கணக்கான மக்களை உடனுக்குடன் சோதிக்கும் கட்டமைப்பு இந்தியாவில் இல்லை. எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது இந்த பாதிப்பு சவாலாக இருப்பதால் நிலைமையை ஓரளவேனும் கட்டுப்படுத்த கொரனா பாதிப்பு குறித்த பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட இருக்கிறது.

பொதுவாக கொரோனா அறிகுறி இருப்பவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதிக்கப்பட்டு வருகிறது. சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சோதனை நடத்தப்படுகிறது. ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தினமும் ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஆனால் அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவதால் ஆய்வு முடிவு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தற்போது இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் 72 ஆய்வகங்கள் செயல்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் மேலும் 49 ஆய்வகங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 51 தனியார் ஆய்வகங்கள் இலவசமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படும் என்றும் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 51 இடங்களில் ஆய்வு மையங்கள் இருந்தாலும் நாம் நேரடியாக சென்று அங்கு நம்மை பரிசோதிக்க முடியாது. உங்களுக்கு கொரானா என்று சந்தேகம் இருந்தால் முதலில் டாக்டர்களை அணுக வேண்டும். பிறகு அவர்கள் உங்கள் ரத்த மாதிரியை எடுத்து தேவை என்றால் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைப்பர்.