பின்தொடர்ந்தார்..! போட்டோ எடுத்தார்..! பிரைவேட் கம்பெனி சிஇஓவால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! அதிர்ச்சி சம்பவம்!

பெங்களூரு: முன்னாள் காதலியின் ஆபாச புகைப்படங்களை பகிர்ந்த சிஇஓ., கைது செய்யப்பட்டார்.


பெங்களூருவை சேர்ந்தவர் ராகுல் சிங் (28 வயது). இவர் புதியதாக தொடங்கியுள்ள  நிறுவனம் ஒன்றில் சிஇஓ., ஆகப் பணிபுரிகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் தனது முன்னாள் காதலியின் ஆபாச புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

இதுபற்றி அந்த பெண் தகவல்தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கவே, போலீசார் வழக்குப் பதிந்து, ராகுல் சிங்கை கைது செய்தனர். அவரது லேப் டாப், மொபைல் ஃபோன் உள்ளிட்டவற்றையும்   போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  

சிஇஓ வேலையில் கெத்தாக வாழத் தெரியாமல் கைவிட்டுச் சென்ற முன்னாள் காதலியை  பழிவாங்க கிளம்பி, ஜெயில் கம்பியை எண்ண நேர்ந்த விவகாரம், பெங்களூருவில் உள்ள தொழில் முனைவோரிடையே பரபரப்பாக விவாதிக்கப்படும் விசயமாக மாறியுள்ளது.