வெடித்து சிதறிய டயர்! உடைந்து விழுந்த பஸ்! மரண பீதியில் உறைந்த பயணிகள்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பாரதி என்ற தனியார் பேருந்து ஒன்று கிளம்பி சிறிது தூரம் சென்ற நிலையில் பேருந்தின் பின்பக்க டயர் திடீரென எதிர்பாராத விதமாக வெடித்தது இந்நிலையில் பேருந்தில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.


காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருத்தணியில் இருந்து சித்தூர் நோக்கி புறப்பட்ட பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் பேருந்தின் பின்பக்க சக்கரம் திடீரென வெடித்தது இதனால் பேருந்து  நிலைதடுமாறி ஓடத் தொடங்கியது. பேருந்து ஓட்டுனர் பேருந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் இச்சம்பவம் நடந்தது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. 

இதையடுத்து பின்பக்க டயர் வெடித்த நிலையில் அதிர்ச்சியில் டயருக்கும் இருக்கைக்கும் இடையில் இருக்கும் மரப்பலகை உடைந்து இருக்கையில் அமர்ந்த இளம்பெண், மற்றும் தாயும் மகளும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் மூவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.