குறுகிய சாலை..! தாறு மாறு வேகம்..! மட்ட மல்லாக்காக கவிழ்ந்த பிரைவேட் பஸ்..! பயணிகளை அதிர வைத்த விபத்து!

காரைக்கால் அருகே தனியார் பேருந்து விபத்துக்கு உள்ளானதில் பயணிகள் பலர் படுகாயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


காரைக்கால் பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம் வரை செல்லும் பயணிகள் பேருந்து, நேற்றைய தினம் பொறையார் அருகே சென்றபோது, திடீரென பிரேக் பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்தது. 

அடுத்த நிமிடமே, பேருந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி வயல்வெளிக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தினால் சுமார் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் நடராஜன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில், இந்த விபத்தின் முழு காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை.