சபாஷ் பிருத்விராஜ்! ஆசைப்பட்ட ஃபேன்ஸி நம்பரை விட்டுக்கொடுத்து வெள்ள நிவாரண உதவி!

வெள்ள நிவாரணத்துக்காக ஃபேன்சி நம்பரை தியாகம் செய்த நடிகர் பிரிதிவிராஜ்.


பிரபல மலையாள நடிகர் பிரிதிவிராஜ்.மணிரத்தினத்தின் ராவணன் உட்பட சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது தந்தை மறைந்த சுகுமாறன்,தாய்,அண்ணன் இந்திரஜித் அனைவருமே நடிகர்கள்.பிரிதிவிராஜ் , மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிஃபர் படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இவர்,3 கோடி மதிப்புள்ள புதிய ரேஞ் ரோவர் கார் ஒன்றை சமீபத்தில் வாங்கினார்.அதற்காக கே.எல் 07- சி எஸ் 7777 என்கிற எண்ணை முன்பதிவு செய்திருந்தார்.இந்த எண்ணை மேலும் பலர் கேட்கவே அதை ஏலம் விட முடிவு செய்தார் கொச்சி ஆர்.டி ஓ.ஏலத்ந்தொகை பல லட்சங்களைத் தாண்டும் என்று எதிர் பார்த்த நிலையில் பிரிதிவிராஜ் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக ஆர்.டி.ஓ அலுவலகதிற்கு அறிவித்து விட்டார்.

காருக்கு ஃபேன்சி நம்பர் வாங்கவிருந்த பணத்தை வெள்ள நிவாரணப் பணிக்கு தரப்போவதாக சொல்லி இருக்கிறார். கடந்த ஆண்டு வெள்ளத்தின் போதும் பிரிதிவிராஜ் 9 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கி இருக்கிறார்.இவரது சகோதரரும் நடிகருமான இந்திரஜித் ' அன்புடன் கொச்சி' என்கிற பெயரில் தன்னார்வளர்களுடன் இணைந்து வெள்ள நிவாரணப் பணியாற்றி வருகிறார்.