பணிப்பெண் மகளிடம் பாலியல் சீண்டல்! வயதை மறந்து அச்சக உரிமையாளர் அரங்கேற்றிய வக்கிரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தன்னிடம் பணிபுரியும் பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த அச்சக உரிமையாளர் பேத்தி வயதில் இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் செயல்படும் அச்சகத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேலை செய்து வந்தார். அவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். ஓனர் என்ற அடிப்படையில் பழக வேண்டிய அச்சக உரிமையாளர் பெண் தொழிலாளி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது.

அப்படி சென்று வந்த சமயத்தில் ஒருமுறை வீட்டில் பெண் தொழிலாளி இல்லை. அங்கு படித்துக்கொண்டிருந்த தன்னுடைய பேத்தி வயதில் இருக்கும், 16 வயது சிறுமியை பார்த்தவுடன் அச்சக உரிமையாளர் தவறான எண்ணம் ஏற்பட்டுள்ளது. உடனே அந்த சிறுமியை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்த பயந்து போன அந்த சிறுமி பயந்து போய் சொந்த ஊரான கேரள மாநிலம் கண்ணூருக்கு சென்று போலீசில் புகார் அளித்தார்.

பின்னர் இந்த வழக்கு ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் அச்சக உரிமையாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் வழக்குபதிவு செய்ததை அறிந்ததும் அச்சக உரிமையாளர் திடீரென்று தலைமறைவாகி விட்டார்.

சிறுமியின் மீது ஏற்பட்ட சபலத்தால் அச்சக வருமானம இன்றி, போலீசுக்கு பயந்து குடும்பத்தையும் காப்பாற்ற முடியாமல் தலைமறைவான அச்சக உரிமையாளரை என்னவென்று சொல்வது?