தூக்கக் கலக்கத்தில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டர்? பரிதாபமாக உயிரிழந்த லாரி டிரைவர்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஈச்சர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிராப்புலியூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது.இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வேகமாக செல்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னே வந்து கொண்டிருந்த ஈச்சர் வேன் ஒன்று வேகமாக மோதியதில் ஈச்சர் வேனின் முன்பகுதி பெருமளவு சேதமடைந்து. அதில் இருந்த ஓட்டுநர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அதிகாலை நேரம் என்பதால் ரோட்டில் அதிக அளவு மக்கள் புழக்கம் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் பின்னே வந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நின்று விபத்து ஏற்பட்ட பகுதியை நோக்கி ஓடி வந்து பார்த்துள்ளனர். 

அப்போது ஈச்சர் வேனில் வந்த ஓட்டுனர் பலத்த ரத்த காயங்களுடன் உயிர் இருந்ததைப்பார்த்து அதிர்ந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மற்றும் தகவல் அறிந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உயிரிழந்தார் ஈச்சர் வேன் ஓட்டுநரை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

பின்னர் இது ஒரு இது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி ஈச்சர் லாரியை ஓட்டி வந்தவர் ஆலந்தூரான் பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் முத்துக்குமார் அதிக நேரம் வாகனம் ஓட்டி வந்த நிலையில் தூக்க கலக்கத்தில் ஆக்சிலேட்டரை வேகமாக மிதித்தது தான் விபத்துக்கு காரணமாக இருக்கும் என போலீசார் முதல்கட்ட விசாரணையின் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் முத்துக்குமாரின் இறப்பு குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. என காவல்துறையினர் போக்குவரத்தினை கட்டுப்படுத்தி சகஜமான சூழ்நிலைக்கு கொண்டு வந்தனர்.