குழந்தைகளை வைத்து ஆபாச கூத்து! விஜய் டிவி, ஜீ தமிழுக்கு வைக்கப்பட்ட ஆப்பு!

தனியார் தொலைக்காட்சிகளில் குழந்தைகளை ஆபாசமான நடன அசைவுகளுக்கு பயன்படுத்த கூடாது என மத்திய தகவல் ஒலிப்பரப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்.


திரைப்படங்களில் பெரிய நடிகர்கள் காதல் காட்சிகளில் செய்யும் ஆபாச உடல் அசைவுகளை , தனியார் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி நடத்தும் போது குழந்தைகளை ஆபாசமான நடன அசைவுகளை செய்ய தூண்டுவதாக குற்றம் சாட்டியதை  அடுத்து, தொடர்ந்து குழந்தைகள் பார்க்க கூடிய இந்த நிகழ்ச்சிகளில் ஆபாச அசைவுகள், வன் முறையை தூண்டும் கருத்துகள் இருக்க கூடாது என கண்டித்துள்ளது.

மேலும் இது போன்ற காட்சிகள் குழந்தைகள் மனதை திசைத்திருப்புவதாகவும், அவர்கள் மன அழுத்தத்தை அதிகர்ப்பதாகவும் அமையும் எனவும்,  தனியார் தொலைக்காட்சிகள் 1995 ஆம் ஆண்டின் கேபிள் டிவி  சட்டப்படி முறையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் முடிந்த அளவு தனியார் தொலைக்காட்சிகள் கண்ணியத்துடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குழந்தைகளை வைத்து ஆபாச நடனம் நடத்தும் சேனல்களுக்கு நல்ல பாடம் கிடைத்துள்ளது.