தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியது பச்சைப் பொய் என்று பிரேமலதா விஜயகாந்த் அம்பலப்படுத்தியுள்ளார்.
கேப்டன் சந்திப்பு பற்றி ஸ்டாலின் கூறியது பச்சைப் பொய்! அம்பலப்படுத்திய பிரேமலதா!
சென்னையில் நேற்று முன் தினம் விஜயகாந்தை அவரது வீட்டில்
சந்தித்து ஸ்டாலின் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. கேப்டன்
– ஸ்டாலின் சந்திப்பின் போது பிரேமலதா உடன் இருந்தார்.
20 நிமிட சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,
கேப்டன் உடல் நிலை குறித்து விசாரிக்க வந்ததாக கூறினார். கலைஞர் மீது மிகவும் பாசம்
கொண்டவர் கேப்டன் என்று அவரது விடியோ மூலம் தெரிந்து கொண்டதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் முழுக்க முழுக்க கேப்டன் உடல் நிலை குறித்து பேசவே
வந்ததாகவும் சந்திப்பின் போது அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்றும் ஸ்டாலின் கூறினார்.
அதே சமயம் தேமுதிக திமுக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி என்று கூறிவிட்டு ஸ்டாலின்
புறப்பட்டார்.
ஒரு அரசியல் கட்சித் தலைவரான ஸ்டாலின் மற்றொரு அரசியல் கட்சித்
தலைவரான விஜயகாந்தை சந்தித்த போது அரசியல்
பேசப்படவில்லை என்று கூறியது நகைப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரேமலதா
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஸ்டாலின் கேப்டன் உடல் நிலை குறித்து விசாரித்ததாக
பிரேமலதா தெரிவித்தார். அதற்கு அப்பாற்பட்டு கேப்டன் – ஸ்டாலின் அரசியல் பேசியதாகவும்
பிரேமலதா கூறினார்.
பிரேமலதாவின் இந்த பேட்டியின் மூலம் விஜயகாந்த் சந்திப்பை
தொடர்ந்து ஸ்டாலின் கூறியது பச்சைப் பொய் என்பது தெரியவந்துள்ளது. அதே சமயம் கேப்டனை
சந்தித்த திருநாவுக்கரசர் கேப்டனுடன் அரசியல் பேசியதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.