பிரேமலதாவுக்கு விளக்கம் வேணுமாம்! தி.மு.க. ஜால்ராஸ் ஸ்டார்ட் மியூசிக்!

தேர்தல் சிறப்பு நிதியாக கம்யூனிஸ்ட் மற்றும் கொங்கு கட்சிகளுக்கு தி.மு.க. கொடுத்த 40 கோடி ரூபாய் விவகாரம் குறித்து பிரேமலதா விளக்கம் கேட்டுள்ள விவகாரம் கடும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.


தேர்தல் நிதி பெறுவது எல்லா காலத்திலும் நடப்பதுதான் என்று கம்யூனிஸ்ட் கட்சி இந்த விவகாரத்துக்குப் பதில் கூறியுள்ளது. ஏனென்றால் கருணாநிதி காலத்தில் இருந்தே இதனை அக்கட்சியினர் கடைபிடித்து வருகின்றனர். இந்த விவகாரத்தை அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில் இன்று பிரேமலதா அதுகுறித்துப் பேசியிருக்கிறார்.

அ.தி.மு.க. கூட்டணிக்கு தன்னுடைய முழு ஆதரவை வழங்கியிருக்கும் பிரேமலதா, அதோடு கம்யூனிஸ்ட் கட்சிக்கு 40 கோடி கொடுத்த விவகாரத்துக்கு விளக்கம் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து கோடிகளை வாங்கிய பிரேமலதா, அடுத்த தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காமல் இருப்பதற்காக கோடிகள் வாங்கியதாக பேச்சு எழுந்தது. இந்த நிலையில் அவர் பேசியிருக்கும் விவகாரம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெட்டி வாங்காத ஒருவர் அதுகுறித்து கேள்வி எழுப்பினால் பரவாயில்லை, அதற்காகவே கட்சி நடத்தும் பிரேமலதா கேள்வி எழுப்பலாமா என்று உடன்பிறப்புகள் தங்கள் ஆன்லைன் அட்டாக்கை ஆரம்பித்துவிட்டனர்.

சும்மா இருங்கக்கா...