அறிவாளி அம்மான்னா அது பிரேமலதாதான்! சுபஸ்ரீ மரணத்துக்கு எவ்வளவு அழகா கருத்து சொல்றாங்க!

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது சுபஸ்ரீ மரணம். ஆனால், அதற்கு அ.தி.மு.க.வினரைவிட கூட்டணிக் கட்சியினர் கொடுக்கும் முட்டுக்கட்டைதான், ஸாரி கொஞ்சம் ஓவர் ரகமாக உள்ளது.


ஏற்கெனவே பிரேமலதாவின் மகன் விஜயபிரபாகரன் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக, ‘அது அ.தி.மு.க.வினர் வைத்த பேனர் என்பதால்தான் இத்தனை பிரச்னையானது. அதுவே பொதுநபர் வைத்த பேனர் என்றால் பிரச்னையாக இருந்திருக்காது’ என்று அரிய கருத்தைக் கொட்டியிருந்தார்.

இப்போது விஜயபிரபாகரனை மிஞ்சும் வகையில் அவரது அம்மா பிரேமலதா ஒரு கருத்து கூறியிருக்கிறார். அதாவது விதி முடிந்துவிட்டதால் சுபஸ்ரீ மரணம் அடைந்துவிட்டாராம். எல்லோரும் சுபஸ்ரீயை தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து வருந்தும்போது, பிரேமலதா மட்டும் சம்பந்தமே இல்லாமல் விதி வந்ததால் போய்ச் சேர்ந்துவிட்டார் என்று பதில் கொடுத்திருக்கிறார்.

இது சம்பந்தப்பட்ட மாணவி குடும்பம் மட்டுமின்றி தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இப்படியும் ஒரு தாய் இருக்கமுடியுமா என்று கேள்வி எழுப்புகிறார்கள். இந்த நிலையில் லாரிகாரர், பிளக்ஸ் போர்டு அடித்தவரையும் கைதுசெய்த போலீஸ், இன்னமும் அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெயகோபாலை கைது செய்யவில்லை. 

இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது, சட்டவிரோதமாகப் பேனர் வைத்த விவகாரத்தில் ஜெயகோபால் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாக இருப்பதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் குறித்து இளைய தலைமுறை அமைப்பைச் சேர்ந்த தமிழ்மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியே ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், ”சுபஸ்ரீ மரணத்துக்குக் காரணமானவர்கள் மீதும் மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிக்கரணை மண்டல அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டேன்,

ஆனால் காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ‘‘சுபஸ்ரீ மரணம் தொடர்பாகக் குற்றவாளிகள், குற்றத்தைத் தடுக்காத மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி இதுகுறித்து அரசு பதில் அளிக்க வேண்டும். என்று உத்தரவிட்டதுடன் நில்லாமல், உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரேமலதா இப்படி பேசணும், நாம மனசாட்சியில்லாம கேட்கணும் என்பதுதான் விதியா.