வங்கிக்கு அவ்வப்போது பணம் கொடுத்துக்கொண்டு இருந்தோம், நாங்கள் கூடுதல் நேரம் கேட்டோம், ஆனால் வங்கி மறுத்துவிட்டது என்று சொல்லியிருக்கும் பிரேமலதா,
காதுல பூ! சம்பளம் குடுக்க பணம் இல்லேன்னாலும் கல்வி சேவையை தொடர்வாராம் பிரேமலதா!
கண்டிப்பாக இந்த சொத்தை மீட்டு எடுப்போம் என்று உறுதியாகத் தெரிவித்திருக்கிறார் பிரேமலதா. கையில் பணம் இல்லை, கேப்டன் சினிமாவில் நடித்து பணம் சம்பாதிக்கவில்லை, சின்னவர் இப்போதுதான் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார், பெரிய மகன் இப்போதுதான் பிசினஸ் தொடங்கியிருக்கிறார். சம்பளம் கொடுக்கவும் சிரமப்படுகிறோம், ஆனாலும் எப்படியாவது கடன் தொகையைக் கட்டிவிடுவோம் என்று உறுதி அளித்தார் பிரேமலதா.
இதுவரை பத்திரிகையாளர்களைக் கண்டாலே தெனாவெட்டாக, நக்கலாக பேசும் பிரேமலதா இன்று அமைதியாகப் பேசியதுதான் அதிசயம். கல்லூரியை மேம்படுத்த கடன் வாங்கியிருந்தோம் என்று கூறிய பிரேமலதா, அவருடைய கல்லூரி மட்டுமின்றி தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள் கடனில்தான் உள்ளது என்றும் எடுத்துக் கொடுத்தார். மேலும் சினிமாவும் இப்போது முழுவதும் நஷ்டத்தில்தான் இயங்குகிறது. எந்தப் படமும் வெற்றி பெறவும் இல்லை என்று சொன்னார்.
கல்லூரியில் போதிய வருமானம் இல்லை என்று சொன்னவர், சட்டென்று, நாங்கள் கல்வி சேவைதான் செய்கிறோம், அதனால் வருமானத்தை எதிர்பார்க்கவில்லை என்று மாற்றிக்கொண்டார். இத்தனை பிரச்னைகள் இருக்கும்போது, திடீரென எப்படி 100 கோடி ரூபாய் புரட்டிக் கொடுக்கப்போகிறார் என்று தெரியவில்லையே..!