பார் முழுவதும் ஜெயலலிதாவாக மாறி நிற்கும் பிரேமலதாவை பார்! திருச்சியில் அதிமுகவினர் அதிர்ச்சி!

பிரேமலதாவின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் ஜெயலலிதாவைப் போல் மாறிக் கொண்டிருப்பதால் அதிமுகவினர் அதிர்ச்சியிலும் தேமுதிகவினர் பீதியிலும் ஆழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார துவக்கத்தில் நீங்கள் செய்வீர்களா என்று கேட்டு கடந்த தேர்தலில் ஜெயலலிதா என்ன செய்தாரோ அதனை செய்தார் பிரேமலதா. சரி பிரச்சாரத்தில் பேசுவது தானே என்று பெரும்பாலும் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதன்பிறகு ஜெயலலிதா பாணியில் தான் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் அதிமுக மற்றும் தேமுதிக பிரமுகர்களை தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வரவழைத்து சந்திப்பதே அவர்களிடமிருந்து பூங்கொத்து பெற்றுக் கொள்வது என ஜெயலலிதா பாணி அரசியலையே பிரேமலதா.

மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போதும் கூட ஜெயலலிதா பேசுவதைப் போல் திமுக தலைவர் ஸ்டாலினை மிகக் கடுமையான வார்த்தைகளில் பிரேமலதா அர்ச்சிக்க ஆரம்பித்தார். 

இந்த நிலையில் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்தார் பிரேமலதா. அப்போது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தது போல் தனது தேவனின் முன்புறம் அமர்ந்துகொண்டே மைக்கில் பேசினார் பிரேமலதா. கடந்த தேர்தலில் ஜெயலலிதா பாணியை தேர்தல் பிரச்சாரம் செய்யும் முறையில் கூட காப்பி அடித்தார் பிரேமலதா. பிரேமலதாவின் இந்த நடவடிக்கை திருச்சி அதிமுகவினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது

அதேசமயம் இது நாள் வரை நமக்கு அன்னையார் போல் நடந்து கொண்ட பிரேமலதா திடீரென வித்தியாசமாக நடந்து கொள்வது ஏன் என்று தேமுதிகவினர் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.