சிதம்பரத்தை விரட்டி விரட்டி வெளுக்கும் பிரேமலதா, தமிழிசை! ஆதரவாக குதித்த ராகுல் காந்தி!

சிங்கம் இளைச்சா ஆட்டுக் குட்டியும் ஏறி விளையாடும்னு சொல்வாங்க.


அந்தக் கதையாத்தான் ஆகிப்போச்சு ப.சிதம்பரம் விவகாரம். முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை தமிழிசை, பிரேமலதா, ஜெயக்குமார் ஆகியோ கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

உப்பைத் தின்றவன் தண்ணியைக் குடித்துத்தான் ஆகவேண்டும் என்று கூறியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். யாராக இருந்தாலும் ஆஜராகி நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதே போன்று மிகவும் ஆனந்தமாக பேட்டி கொடுத்திருக்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன். மடியில் கனம் இல்லை என்றால் எதற்கு ப.சிதம்பரம் பயந்து ஓட வேண்டும். உடனடியாக அஜராகட்டும் என்று கூறியிருக்கிறார்.

அதேபோன்று ஜெயக்குமாரும், ‘இதெல்லாம் சாதாரண விஷயம், சட்டத்துக்குப் பயந்து தப்பிச்சு ஓட முடியுமா? ஆஜராக வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

இதுவரை இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போதுதான் முதன்முறையாக குரல் கொடுத்திருக்கிறார். ப.சிதம்பரம் நல்ல பெயருக்கு களங்கம் விளைவிக்க சி.பி.ஐ. முயற்சி செய்கிறது. முதல் தகவல் அறிக்கையில் ப.சிதம்பரம் பெயர் இல்லாத நிலையில், அவர் ஜாமீன் மனுவை நிராகரிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

எப்படியாயினும் இன்று இரவுக்குள் சிதம்பரத்தை கைது செய்தே தீரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். பார்த்துவிடலாம்.