வேலூருக்குள் ஒருவழியா பிரேமலதாவும் குதிச்சாச்சு! சண்முகம் ஜெயிப்பாரா?

அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. முறுக்கிக்கொண்டு இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், பிரேமலதா வேலூரில் திடீரென ஒரு நாள் பிரசாரம் மேற்கொண்டார்.


வேலூர் நாடாளுமன்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய அவர் மத்தியில் மாநிலத்தில் நமது கூட்டணி ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்குது உறுதியாக மக்களுக்கு தேவையானதை கேட்டு பெறமுடியும். இந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தல் தடைபட்டதற்கு தி.மு.க.தான் காரணம் என்பது உங்களுக்கு தெரியும். திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து அத்தனை தொகுதியிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

தி.மு.க.  கொடுத்த வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியுமா ஆனால் எங்கள் கூட்டணி அப்படி இல்லை சொல்லிட்டு போற கூட்டணி இல்லை, சொன்னதை செய்கின்ற கூட்டணி நீங்கள் சிந்தித்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியூடவுன் இரயில்வே சுரங்க பாதை அமைக்கப்படும். சி.எல். சாலை சின்ன ஆற்று பாலம் கட்டப்படும் பாதாள சக்கடைத் திட்டம் கொண்டுவந்து துய்மையான நகராட்சியாக தரம் உயர்ந்தபடும்.  அது மட்டுமல்ல மக்கள் பயன் படும் வகையில் காவேரி, கோதாவரி நதிகள் இணைப்பு நிச்சயம் செயல் படுத்துவோம் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்துள்ளது என்று அவர் பிரசாரம் செய்தார்

அப்போது அதிமுக அமைச்சர்கள் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேமுதிக மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர். பிரேமலதா பிரசாரத்தால சண்முகம் ஜெயிப்பாரான்னு பார்க்கலாம்.

கோபிநாத்., வாணியம்பாடி