காதல்! செக்ஸ்! கர்ப்பம்! இளம் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்! நெஞ்சை உறைய வைக்கும் காரணம்!

புதுச்சேரி: கர்ப்பம் தரித்த இளம்பெண்ணை, பெட்ரோல் ஊற்றி எரித்த காதலனை போலீசார் கைது செய்தனர்.


புதுவையை ஒட்டியுள்ள ஆரோவில் பொம்மையார்பாளையம் ரோட்டில் உள்ள முந்திரிதோப்பில், கடந்த ஏப்ரல் 30ம் தேதி சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலமாகக் கிடந்துள்ளார். அவரது முகம் உள்ளிட்ட பல்வேறு பாகங்கள் தீயில் எரிந்த நிலையில், அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதன்பேரில், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு வந்த வாலிபர் ஒருவர், தனது அக்காவை காணவில்லை என புகார் அளித்தார். இதையடுத்து, அந்த வாலிபரையும், அவரது குடும்பத்தினரையும், கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணின் சடலத்தை அடையாளம் காண போலீசார் அழைத்துச் சென்றனர். அதைப் பார்த்ததும், அது காணாமல் போன தனது அக்காதான் என, அந்த வாலிபர் அடையாளத்தை உறுதி செய்தார். 

இதன்பின், போலீசார் அவரது குடும்பத்தினரிடமும், நெருங்கியவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, புதுவை நேருவீதியில் உள்ள பாத்திரக் கடையில் பணிபுரிந்து வந்த லட்சுமி என்ற இந்த இளம்பெண்ணை,  உடன் பணிபுரிந்த டிரைவர் அருண்குமார் காதலித்துள்ளார். இதன்பேரில், இளம்பெண்கூட அவர் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில், கர்ப்பம் தரித்ததால், திருமணம் செய்துகொள்ளும்படி, லட்சுமி வலியுறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அருண்குமார், தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து, தலையில் அடித்து மயக்கமடைய செய்து, பொம்மையார் பாளையம் முந்திரி தோப்பிற்கு கொண்டு சென்று, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பிடியோடியுள்ளார். 

இதற்கிடையே, போலீசில் சிக்கிய அருண்குமார், தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.