கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்து நடனமாடிய தாய், மகள்! நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்!

அமெரிக்காவில் சிகாகோ மாகாணத்தில் வசித்து வந்தவர் மார்லேன் ஒச்சோ லோபேஸ், 19 வயதான இவருக்கு 3 வயதில் ஒரு மகனும், 9 மாதம் கர்ப்பிணி பெண்ணாகவும் இருந்துள்ளார்.


கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் இவர் காணாமல் போனதால் அதிர்ச்சியான அவரது குடும்பத்தார் தேடலில் ஈடுப்பட்டு கிடைக்காததால், போலீசிடம் புகார் அளித்துள்ளனர்.

மார்லேன் காணாமல் போன அதே நாளில் அருகில் வசித்து வந்த 46 வயது பெண்மணி தனது குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்றுள்ளனர். அப்போது, சற்று சந்தேகித்த மருத்துவர் பரிசோதித்து பார்க்கையில், குழந்தையின் DNA அழைத்து வந்த பெற்றோர்களுடன் ஒத்துப்போகவில்லை.

உடனடியாக, போலீசிடம் மருத்துவர் தெரியப்படுத்தியுள்ளார். விசாரணையில், இவர்களின் வீட்டின் பின் புறம் மார்லேன் சடலம் கிடைத்துள்ளது. மேலும், அவர் வயிற்றில் கிழிக்கப்பட்டு குழந்தை வெளியில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இறந்து கிடந்தார்.

இந்த தம்பதியினரிடம் விசாரித்த போலீசார், மார்லேன் பெற்றோர்கள் பேஸ்புக்கில் ஒரு கணக்கு நடத்தி வருவதாகவும், அதன் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தைக்கான இலவச பொருட்கள் தறுவதாகவும் ஆசை காட்டி, கொலை செய்து குழந்தையை எடுப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால், உடனடியாக அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

குழந்தையை வெளியே எடுத்த பிறகு தாயும் மகளும் கொடூரமாக ஆட்டம் போட்டுள்ளனர்.