திருமணமாகி 5 மாதத்தில் 4 மாத கர்ப்பம்! சரியில்லாத கணவன்! மனைவி எடுத்த விபரீத முடிவு!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபடுவதால் ஆத்திரமடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குறுங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜசெந்தூரான் இவருக்கும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வசுந்தரி என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணமானது.

தற்போது செல்வசுந்தரி 4 மாத கர்ப்பிணியாக உள்ளநிலையில் அவரது கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து தொந்தரவு செய்துள்ளார். பலமுறை கூறியும் திருந்தாத அவரது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவரது மனைவி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பெண்ணின் உறவினர்கள் தங்கள் மகளை அடித்துக் கொன்று விட்டனர், என்று காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் ராஜசெந்தூரான் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.