வரமறுத்த மனைவி..! கர்ப்பிணி என்றும் பாராமல் கணவன் செய்த பகீர் சம்பவம்! பிறகு அரங்கேறிய விபரீதம்!

பண்ருட்டி அருகே கர்ப்பவதியாக இருந்த காதல் மனைவியை கணவரே கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கணவர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பண்ருட்டி அருகில் கீழ்கவரப்பட்டியை சேர்ந்தவர் காத்தவராயன் இவரது மகள் சித்திர வயது 23 , குடும்பத்துடன் பல்லடம் பகுதியில் நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் அதே ஆலையில் வேலைபார்த்த ஹென்றி என்பவரை சித்திரா காதலிப்பது தெரிய வர இரண்டு வீட்டினரும் சம்மதிக்க கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக காதல் திருமணம் நடைபெற்றது. 

திருமணமாகி அதே பகுதில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த சித்திரா - ஹென்றி ஜோடியின் வாழ்க்கை நிம்மதியாக சென்று கொண்டிருந்த நிலையில் தான், சித்திரா கர்பமாக உள்ளது தெரிய வந்துள்ளது, இதற்கிடையில் மனைவியை ஆசையால தனது சொந்த ஊருக்கு அழைத்து சென்று கிறிஸ்துமஸ் கொண்டாட நினைத்துள்ளார் ஹென்றி. 

இது குறித்த பேச்சு வந்த போதெல்லாம் இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் மூண்டுள்ளது, மேலும் கர்பவதியாக இருக்கும் மகளை ஊருக்கு அனுப்பி வைக்க சித்திரா பெற்றோரும் மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த ஹென்றி சம்பவத்தன்று மீண்டுமாக சித்திராவை ஊருக்கு அழைக்க ,அவர் கர்ப்பமாக உள்ளதை காரணம் காட்டி திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

இதனால் கோபத்தின் உச்சிக்கு போன ஹென்றி கர்பிணி பெண் என்றும் பாராமல் காய் கறி நறுக்கும் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்றதில், பயத்தில் தானும் மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார், அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மருத்துவ மனையில் அனுமதித்தனர். 

துரதிர்ஷ்டவசமாக ஹென்றி உயிரிழந்ததை அடுத்து சித்திரா தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கே ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.