நடுரோட்டில் 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு சதக்! சதக்! அங்கேயே குழந்தை பிறந்த பரிதாபம்! பிறகு நேர்ந்த விபரீதம்!

லண்டனில் குடும்ப தகராறு காரணமாக கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு சம்பவ இடத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது.


லண்டனின் தெற்கு மண்டலம் பகுதியில்க்ராய்டன்  எனுமிடத்தில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கணவர் கத்தியை எடுத்து 8 மாத கர்ப்பிணி பெண்ணான கெல்லி மேரியை குத்தியுள்ளார் அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கத்திக்குத்துடன் அப்பெண் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து போலீஸார் அங்கு வந்த நிலையில் 8 மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் குழந்தை உயிருடன் இருப்பதை உறுதி செய்த பின்னர் அக்குழந்தையை ஆபரேஷன் மூலம் வெளியே எடுத்தனர்.

குழந்தையின் உடல் நிலை மோசமாக உள்ள நிலையில் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இரு நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் கொலைக்கான காரணங்கள் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.