திடீர் பிரசவ வலி! துடித்த கர்ப்பிணி! ஓடும் ரயிலில் குவா! குவா சத்தம்!

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள ஒரு ரூபாய் கிளினிக் இதுவரை ரயிலில் குழந்தை பெற்றெடுத்த 9 பெண்களுக்கு சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளது.


தமிழகத்தில் எம்ஜிஆரின் புகழை போற்றும் வகையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவரது பெயரை சூட்டியது போலவே மும்பையில் மாவீரர் சத்ரபதி சிவாஜி பெயரின் புகழை போற்றும் வகையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை ரயில்வே முனையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. (சென்னையில் எம்ஜிஆர் பெயர், மும்பையில் சிவாஜி பெயர் என நடிகர் சிவாஜியை உங்கள் மனதில் நினைக்க வேண்டாம்)

மகாராஷ்டிர மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜா ரயில் முனையத்தில் இருந்து தானே ரயில் நிலையத்திற்கு நிறைமாத கர்ப்பிணி பயணித்து கொண்டிருந்தார். ரயில் தானே நிலையத்தை அடைந்தபோது அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக ரயிலில் பயணம் செய்த பெண்கள், ஊழியர்கள் அவர் குழந்தை பெற்றெடுக்க உதவினர்.

ரயில் தானே நிலையத்திற்குள் நுழையும் தருணத்தில் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் அந்தபெண். பின்னர் உடனடியாக தானே ரயில் நிலையத்தில் ஒரு ரூபாய் கிளினிக்கிற்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தாயும், சேயும் நலமாக இருப்பது உறுதியான பின்னர் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

ரயில்வேயின் ஒரு ரூபாய் கிளினிக்கின் மருத்துவர்கள் வெற்றிகரமாக பிரசவத்திற்கு உதவியது இது 9 வது முறையாகும்.

ரயிலில், பேருந்து நிலையத்தில், கழிவறையில், பொது இடங்களில், கிராமங்களில் சுகப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கிறது. மருத்துவமனைக்கு சென்றால் மட்டும் சிசேரின் முறையில் பிறக்கிறது. காரணம்?