திருமணமாகி 6 மாதத்தில் 4 மாத கர்ப்பம்! 22 வயது சிவரஞ்சனிக்கு மாமியார் வீட்டில் ஏற்பட்ட விபரீத முடிவு! கொதிக்கும் உறவுகள்!

திருமணமான ஆறே மாதத்தில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ். இவருக்கு சிவரஞ்சனி என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.  

இந்நிலையில் சிவரஞ்சனி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் திடீரென நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிவரஞ்சினியின் உறவினர்களுக்கு ரங்கராஜ் தகவல் தெரிவித்தார்.  

பிறகு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இதர பிரேத பரிசோதனைகள் முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பொழுது சிவரஞ்சினியும் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

"தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை. வரதட்சனை கொடுமை காரணமாக இவர்கள் அடித்துக்கொலை செய்து தூக்கு நாடகம் ஆடுகின்றனர்." என சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

பிறகு அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக சாலை மறியலை கலைத்தார்.  

சிவரஞ்சனியின் தாயார் குளித்தலை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவரஞ்சனி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரித்து வருகின்றனர்.