வயிற்றுக்குள் ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்..! 10 மாதத்தை தாண்டியும் குழந்தை பிறக்காத விநோதம்..! அதிர்ச்சியில் டாக்டர்கள் எடுத்த விநோத முடிவு!

லண்டன்: உடல் முழுக்க தொப்புள் கொடி சுற்றிக் கொண்டதால் கருவிலேயே குழந்தை இறந்துவிட்டது.


ஜார்ஜினா ஹார்டி என்ற 26 வயது பெண், தனது ஆண் நண்பருடன் இணைந்து, குழந்தை பெற்றுக் கொள்ள தீர்மானித்தார். இதன்படி, கருத்தரித்த ஜார்ஜினா, 42 வாரங்கள் கரு வளர்ந்த பிறகே, கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்டார். இங்குதான் ஒரு சிக்கல் ஏற்பட்டது.

ஆம், உரிய காலத்தில் பிரசவத்திற்கு வராமல், 3 வாரங்கள் காலதாமதமாக வந்ததால், கருவில் உள்ள குழந்தை மேலும் வளர்ந்துவிட்டது, அத்துடன் குழந்தையின் கழுத்தை சுற்றிலும் தொப்புள் கொடி சூழ்ந்தபடி இருந்துள்ளது. இதனால், குழந்தை வளர வளர தொப்புள் கொடியே, கயிறு போல அதன் கழுத்தை இறுக்கி கொல்வது போன்ற சூழல் ஏற்பட்டது.  

பொதுவாக, 37 முதல் 42 வாரங்களுக்குள் பிரசவம் ஏற்பட வேண்டும். ஆனால், ஜார்ஜினாவின் காலதாமதம் தற்போது கருவில் உள்ள குழந்தைக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதற்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்த நிலையில், ஜார்ஜினா, மருத்துவ விதிமுறைகளை தளர்த்தி தனக்கு சிசேரியன் செய்யும்படி பிரிட்டன் நீதிமன்ற உதவியை நாடினார். இதையேற்று அவருக்கு சிறப்பு அனுமதி தரப்பட்டது.

சிசேரியன் செய்து குழந்தையை அகற்று முயன்றாலும், முடியவில்லை. காரணம், கருவிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டது. இதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. காலதாமதமான பிரசவம், தொப்புள் கொடி கழுத்தை இறுக்கியது போன்ற ஏதேனும் ஒன்றால் குழந்தையின் உடல் வளர்ச்சி பாதித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இதுபற்றி மருத்துவர்கள் தற்போது வரை ஆய்வு செய்து வருகின்றனர்.