4 பேர் பலி! விபரீதத்தில் முடிந்த சொகுசு பேருந்தின் அதிவேகம்!

மதுரை அருகே அதிவேகத்தில் சென்ற பர்வீன் டிராவல்ஸ் பேருந்தால் 4 பேர் துடி துடித்து உயிரிழந்தனர்.


நேற்று இரவு 11 மணியளவில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து சென்னை நோக்கி பர்வீன் டிராவல்ஸ் நிறுவனத்தின் சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டது. புறப்பட்டது முதலே அந்த பேருந்து அதிவேகமாக சென்றுள்ளது. 

திருப்பரங்குன்றத்தை அடைந்த நிலையில் பிரதான சாலையில் உள்ள வசந்த நகர் பாலத்தின் மீதும் பர்வீன் பேருந்து அதிவேகத்தில் சென்றுள்ளது. அப்போது எதிர் திசையில்  1 ஸ்கூட்டர் மற்றும் ஒரு பைக்கில் மொத்தமாக 5 பேர் வந்து கொண்டிருந்தனர்.

பர்வீன் டிராவல்ஸ் நிறுவனத்தின் பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல வலதுபக்கம் ஏறிச் சென்றுள்ளது. அதிவேகத்தில் விதிகளை மீறி எதிர் சாலையில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்து வந்துகொண்டிருந்த ஸ்கூட்டர் மற்றும் பைக் மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இதில் இருசக்கர வாகனங்களில் சென்ற 5 பேரில் பெண் தலைமைக் காவலரான ஜோதி உட்பட 3 பேர் பேருந்தின் சக்கரத்திற்குள் விழுந்து நசுங்கினர். ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். பர்வீன் டிராவல்ஸ் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தி நான்கு பேர் பலியான  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.