2021 சட்டமன்ற தேர்தல் வியூகத்திற்கு திமுக சுமார் 350 கோடி ரூபாய் வரை பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் நிறுவனத்திடம் வழங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களின் பிரச்சாரம் துவக்க நிலையிலேயே அம்பலப்பட்டு போயுள்ளது.
90 சதவீதம் பேர் வட இந்தியர்கள்! ரூ.350 கோடியையும் கொடுத்து பீகாரி பிகேவிடம் ஏமாந்தாரா ஸ்டாலின்..? ஆதாரம் பேஸ்புக்கில்..!
சட்டமன்ற தேர்தலுக்கான சமூக வலைதள பிரச்சாரத்தை திமுகவிற்காக பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் துவங்கியுள்ளது. அதன்படி ஒன்றினைவோம் வா என்கிற முழக்கத்துடன் சமூக வலைதளங்களில் பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் பேஸ்புக்கிலும் ஒன்றினைவோம் வா என்கிற பக்கம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த பக்கத்தை லைக் செய்யுமாறு பேஸ்புக் நிறுவனத்திடம் பணம் கொடுத்து விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விளம்பரத்தை பார்த்து ஏராளமானவர்கள் ஒன்றினைவோம் வா பக்கத்தை பின்தொடர ஆரம்பித்துள்ளார். இந்த செய்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது வரை சுமார் ஒரு லட்சத்து 25ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் இந்த பின்தொடர்பாளர்களில் சுமார் 90 சதவீதம் பேர் தமிழ்நாட்டுக்காரர்களே இல்லை. அந்த 90 சதவீதம் பேரும் வட இந்தியர்கள். இதனை அவர்களின் பெயரை கொண்டே தெரிந்து கொள்ள முடியும். ஒன்றினைவோம் வா பக்கத்தை பின்தொடர்பவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் தான் திமுகவினர்.
இவர்களும் கூட ஏற்கனவே திமுகவின் அனைத்து பக்கங்களையும் பின்தொடர்பவர்கள். இதே போல் ஒன்றினைவோம் வா பக்கத்தில் ஸ்டாலின் அன்றாட செயல்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதற்கும் லைக்குகள் குவிகின்றன. ஆனால் இந்த லைக்ஸ்களை அள்ளி வீசுபவர்களும் வட இந்தியர்கள் தான்.
அதாவது ஒன்றினைவோம் வா என்கிற பேஸ்புக் பேஜ் பணம் கொடுத்து புரமோட் செய்யப்படுகிறது. தமிழகத்தில் பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லாத காரணத்தினால் அதற்கு பெரிய அளவில் பின்தொடர்பாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் லொகேசனை மாற்றி வட இந்தியாவில் இருந்து அதிக பின்தொடர்பாளர்கள் கிடைக்கும் வகையில் பிகேவின் ஐபேக் ஏற்பாடு செய்துள்ளதாக கூறுகிறார்கள்.
தமிழக அரசியல் கட்சியான திமுகவிற்கு வட இந்தியர்கள் பின்தொடர்பாளர்கள் ஆகி என்ன பலன், எனவே சுமார் 350 கோடி ரூபாய் டீலின் முதல் கோணலே முற்றிலும் கோணலாகும் என்கிறார்கள்.